எல்லாம் நல்லபடியாக நடந்தால் காஷ்மீரிகளை துப்பாக்கிகளின்றி சந்திப்போம்: ராணுவ தளபதி பிபின் ராவத்

செய்திகள்
Updated Aug 13, 2019 | 14:40 IST | Times Now

பாகிஸ்தான் தனது போர் உபகரணங்களை நகர்த்துவது குறித்து பேசிய பிபின் ராவத், இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதால் அதுபற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

Army Chief General Bipin Rawat
ராணுவ தளபதி பிபின் ராவத்  |  Photo Credit: ANI

புது டெல்லி: ஒரு நாள் இல்லை ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் துப்பாக்கிகள் இன்றி சந்திக்கும் என ராணுவ தளபதி பிபின் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “70-80களில் காஷ்மீர் மக்களுடன் இருந்த நல்லுறவு திரும்பவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அக்காலத்தில், நாங்கள் அங்கு பணியமர்த்தப்பட்டிருப்போம். ஆனால், அப்போது துப்பாக்கிகளின்றி மக்களை சந்திப்போம். எல்லாம் நல்லபடியாக நடந்தால் மீண்டும் அவர்களை துப்பாக்கிகளின்றி சந்திப்போம்,” என்றார் அவர்.

எல்லையில் பாகிஸ்தான் தனது போர் உபகரணங்களை நகர்த்துவது குறித்து வெளியான தகவல் தொடர்பாக பேசிய பிபின் ராவத், “எல்லோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம் தான். அதுபற்றி நாம் அதிகம் கவலைப்படக் கூடாது. நமது ராணுவ பணிகளைப் பொறுத்தமட்டில் நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்,” என்றார்.

முன்னதாக, இன்று வடக்கு கமாண்ட் பிரிவின் தலைவராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

“வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ராணுவத் தளபதி பார்வையிட்டார். தற்போதைய நிலவரம் குறித்தும் சமீபத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விவரிக்கப்பட்டது. ஊர்மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்கள்நல, பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது குறித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்,” என்று வடக்கு கமாண்ட் பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ள போதும், ஸ்ரீநகரில் இன்னும் பதட்ட நிலையே தொடர்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் ஒத்திகை நிகழ்ச்சிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் திட்டக்குழுவின் முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

NEXT STORY
எல்லாம் நல்லபடியாக நடந்தால் காஷ்மீரிகளை துப்பாக்கிகளின்றி சந்திப்போம்: ராணுவ தளபதி பிபின் ராவத் Description: பாகிஸ்தான் தனது போர் உபகரணங்களை நகர்த்துவது குறித்து பேசிய பிபின் ராவத், இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதால் அதுபற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...