தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

செய்திகள்
Updated Oct 21, 2019 | 15:17 IST | Times Now

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக் கூடும்

Heavy rain expected to Tamil Nadu
file photo  |  Photo Credit: IANS

டெல்லி: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒருநாள் முன்னதாக நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44 செ.மீ ஆகும். ஆனால், கடந்த ஆண்டு  இயல்பை விட 24 சதவீதம் குறைவாக வடகிழக்குப் பருவமழை பதிவானது.

இந்தாண்டு இயல்பான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரத்தையொட்டிய வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

NEXT STORY