மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்: எச்.ராஜா எச்சரிக்கை

செய்திகள்
Updated Aug 14, 2019 | 20:18 IST | Times Now

சாதிக்கயிறை ஒழிக்க பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரானது என எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

H Raja
எச்.ராஜா 

காரைக்குடி: பள்ளிகளில் சாதிக்கயிறை ஒழிக்க பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது கண்டறிதத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அதன்படி தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகள் கட்டியுள்ளதாகவும், சாதியை குறிக்கும் வகையில் நெற்றியில் திலகம் அணிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது விளையாட்டு தேர்வுகள், உணவு இடைவேளைகள், மற்றும் யார் யாருடன் பழக வேண்டும் ஆகியவற்றில் எல்லாம்  சாதி வேறுபாடுகளை புகுத்துவதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது ஆகியவை இந்து மத நம்பிக்கை தொடர்பானது என்றும் அதனை பள்ளிகளில் தடை செய்வது இந்து மதத்திற்கு விரோத செயலாகும் என்று தெரிவித்தார். மேலும் மற்ற மதத்தினர் மத அடையாளங்களுக்கு ஏன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் தடை விதிக்கவில்லை என்றும் இந்து மத உணர்வுக்கு எதிராக செயல்படும் பள்ளிக்கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும்  எச்.ராஜா தெரிவித்தார். இதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

.

 

 

NEXT STORY
மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்: எச்.ராஜா எச்சரிக்கை Description: சாதிக்கயிறை ஒழிக்க பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணை ஹிந்து மத நம்பிக்கைக்கு எதிரானது என எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...