போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைத்தது குஜராத்!

செய்திகள்
Updated Sep 11, 2019 | 18:07 IST | Times Now

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலம் அபராதத் தொகையை குறைத்துள்ளது

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைத்து குஜராத் மாநிலம்,Gujarat reduces fines for trafflic violation
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைத்து குஜராத் மாநிலம்  |  Photo Credit: BCCL

குஜராத்: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் அபராதத் தொகையை குறைத்துள்ளது.   

மோட்டார் வாகன திருத்த மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பலரும் போக்குவரத்து விதிமீறலுக்காக ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வரும் நிலையில், குஜராத் மாநிலம் அபராதத் தொகையை குறைத்துள்ளது. 

காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதற்கு மத்திய அரசு ரூ.1000 அபராதம் விதித்துள்ளது. அதனை குஜராத் அரசு ரூ.500 ஆக குறைத்துள்ளது. லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ.5000 என்பதை இருசக்கரவாகன ஓட்டுனர்களுக்கு ரூ.2000 ஆகவும், 4 சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.3000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால் அபராதமாக ரூ.1000 வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குஜராத் அரசு 100 ரூபாயாகக் குறைத்துள்ளது. இது தவிர வேறு பல போக்குவரத்துக்கு விதிமீறல்களுக்கும் வசூலக்கப்பட்டிருந்த தொகையை குஜராத் அரசு குறைத்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரை அபராதத் தொகையை குறைக்காத நிலையில், குஜராத் அரசு முதல் மாநிலமாக அபராதத் தொகையை குறைத்துள்ளது. 

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிக்கையாளர்களிடன் கூறுகையில்,  ''வருமானத்திற்காக அரசு அபராதத்தை கூட்டவில்லை என்றும் விபத்துகளை தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் மாநில அரசுகள் அபராதத்தை குறைக்கும் பட்சத்தில் மக்கள் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதும் அதனை மதிக்கவில்லை என்பதும் உண்மையாகிவிடாது என்று தெரிவித்தார். ஆனால் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபாணி இதனை பற்றி கூறுகையில் அபராதம் குறைப்பு என்பது போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது என பொருள் ஆகாது என்று தெரிவித்தார். தற்போது குஜராத் மாநிலத்தில் அபராதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் அபராதம் குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.     


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...