வலு பெறுகிறது வாயு புயல் - குஜராத், மும்பையில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

செய்திகள்
Updated Jun 11, 2019 | 09:48 IST | Times Now

வாயு புயல் இன்று முதல் வலுப்பெற்று நாளை மறுநாள் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் மஹுவா  இடையேயான கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Cyclone Vayu
Cyclone Vayu  |  Photo Credit: Twitter

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் லட்சத்தீவு பகுதியை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் விரைவில் புயலாக உருவாகும் எனவும் தெரிவித்திருந்தது. 

தற்போது அந்தப் புயலுக்கு வாயு என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த புயல் இன்று முதல் வலுப்பெற்று நாளை மறுநாள் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் மஹுவா  இடையேயான கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110-120 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடுமாம்.  இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளனர். 

புயலால் மும்பைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்திருப்பதால் மும்பை காவல்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுத்துவருகிறது. இந்த புயலால் நிலப்பரப்பை விட கடலில் அதிக மழை பெய்யும் என்றும் வானைலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

NEXT STORY
வலு பெறுகிறது வாயு புயல் - குஜராத், மும்பையில் முன்னேற்பாடுகள் தீவிரம்! Description: வாயு புயல் இன்று முதல் வலுப்பெற்று நாளை மறுநாள் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் மஹுவா  இடையேயான கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles