காலமானார் யூடியூபின் சமையல் மன்னர் நாராயண ரெட்டி

செய்திகள்
Updated Nov 01, 2019 | 17:10 IST | Times Now

கிராமத்து சமையல் மட்டுமின்றி டோனட், பீட்சா, பர்கர், பாஸ்தா போன்ற அனைத்து வகை உணவுகளையும் பெரிய அளவில் சமைக்கும் திறமை வாய்ந்தவர்.

Grandpa Kitchen Narayana Reddy passes away
Grandpa Kitchen Narayana Reddy passes away  |  Photo Credit: YouTube

’கிராண்ட்பா கிச்சன்’ மூலம் அனைவரோடும் உறவாடிய நாராயணா ரெட்டி தீபாவளி அன்று முதுமையின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 73.

வெறும் இரண்டே வருடங்களில் அவரது யூ-டியூப் சேனலின் சப்ஸ்கிரைபர்கள் எவ்வளவு தெரியுமா? 6.17 மில்லியன் மக்கள். சமீகாலமாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்துவந்த நாராயண ரெட்டிக்கு உலகெங்கிலும் இருந்தும் பலர் உடல் நலம் தேறி வருவீர்கள் என்று அவருக்கு வீடியோ மூலம் நலம் விசாரித்துவந்தனர். 

கடைசியாக அக்டோபர் 25ஆம் தேது கூட தனது சேனலின் வழியாக நேரலையில் தோன்றி உடல்நலம் குறித்துப் பேசியுள்ளார் நாராயண ரெட்டி. தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர், கிராமத்து சமையல் மட்டுமின்றி டோனட், பீட்சா, பர்கர், பாஸ்தா போன்ற அனைத்து வகை உணவுகளையும் பெரிய அளவில் சமைக்கும் திறமை வாய்ந்தவர். இந்த வயதிலும் 50 பேருக்கு அசராமல் சமைக்கிறாரே என்பதைப் பார்ப்பதற்கே இவருக்கு ரசிகர்ப்பட்டளம் ஏராளம். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமைக்கும் அவ்வளவு உணவுகளையும் ஏழைக் குழந்தைகளுக்கு அவர்களே பரிமாறவும் செய்வார்கள். 

இந்த சேனலின் ஸ்லோகனே ’லவ்விங், கேரிங், ஷேரிங்’ தான், இதனை எப்போதும் நாராயண ரெட்டிக் கூறிக்கொண்டே இருப்பார். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கடைசியாக க்ரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் செய்ததுதான் இவரது இறுதி சமையல். அதன் பின் உடல்நலம் குன்றியவர் எதுவும் சமைக்கவில்லை. கடைசியாக அவரது இறுதி சடங்கும் அந்த யூடியூப் சேனலில் காட்டப்பட்டது. அதில் உயிருடன் இருக்கும்போது நாராயண ரெட்டி கூறிய வார்த்தை என்ன தெரியுமா? உலகில் இருக்கும் இறுதி நாட்கள் வரை மற்றவருக்கு உதவி செய்யுங்கள் என்பதுதான்.

இதைக் கூறியது மட்டுமல்லாமல் தனது 73 வயது வரை மற்றவர்களுக்கு உதவி செய்து சாதித்தும் காட்டியிருக்கிறார் இந்த யூடியூப் கிராண்ட்பா...


 

NEXT STORY