இந்தியாவின் 7வது அதிபராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த சனிக்கிழமை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் ஆளும் ஐக்கிய தேரியக் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவும் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகின. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
சனிக்கிழமை இரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாகின. தமிழர்கள் வாக்கு பெரும்பாலும் சஜித் பிரேமதாசாவுக்கும் சிங்கள மக்களின் வாக்கு பெரும்பாலும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் கிடைத்தது. கடும் போட்டிக்குப் பிறகு 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த சஜித் பிரேமதாசா 41.99% வாக்குகள் பெற்றார்.
இதனால் வெற்றிபெற்று அதிபரான கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினார். இதையடுத்து அனுராதாபுரத்தில் உள்ள புத்த கோவிலுக்கு அருகே இன்று காலை இலங்கையின் 7வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அப்போது உரையாற்றியவர் தமிழர்கள் வாக்கு அளிப்பர்கள் என்று நினைத்தேன். இருப்பினும் அவர்களையும் சமமாகவே பார்க்கிறேன். ஊழல் இல்லாத நாடாக, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் முழு மூச்சுடன் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.