குழந்தைகள் தினம்; கூகுள் டூடிலில் இடம்பெற்ற 7 வயது சிறுமியின் ஓவியம்!

செய்திகள்
Updated Nov 14, 2019 | 09:15 IST | Times Now

இந்தப் போடிக்காக சுமார் 1.1. லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.

Google doodle on children's day
Google doodle on children's day  |  Photo Credit: Twitter

இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 என்றாலும் இந்தியாவில் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையே குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். இதனை கவுரவிக்கும் விதமாக கூகுள் நாடு முழுவதும் நடத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 7 வயது சிறுமியின் ஓவியத்தை இன்று கூகுள் டூடிலாக பதிவிட்டிருக்கிறது.

இந்தப் போடிக்காக சுமார் 1.1. லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த ஓவியப் போட்டியின் தலைப்பாக  ‘When I grow up, I hope ...’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சுமார் 50 நகரங்களில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களில் ஹரியானா மாநிலம் கூர்கோனைச் சேர்ந்த 7 வயது சிறுமி திவ்யான்ஷி சிங்கால் முதலிடம் பெற்று அவரது ஓவியம் கூகுள் டூடிலில் இடம்பெற்றுள்ளது. 

அந்த சிறுமி ’நடக்கும் மரங்கள்’ என்ற தலைப்பில் கூகுள் டூடிலை வரைந்துள்ளார். குழந்தைகள் தினமான இன்று கூகுள் இதனைப் பதிவேற்றி உள்ளது. இந்த தலைப்பில் வரைந்ததற்கு காரணமாக அந்த சிறுமி கூறியது, ‘’ எனது பாட்டி அவர் வீட்டுக்கு அருகில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து மிகவும் வருத்தம் அடைந்தார். அப்போது நான் நினைத்தேன் மரங்களால் நடக்க முடிந்தால் நாம் அதனை வெட்ட வேண்டாமே என்று’’ இவ்வாறு கூறியுள்ளார் அந்த 7 வயது குட்டி ஓவியர்!

NEXT STORY