கோதாவரி படகு விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

செய்திகள்
Updated Sep 17, 2019 | 22:30 IST | Times Now

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், காணாமல் போன 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Godavari boat tragedy
கோதாவரி படகு விபத்து  |  Photo Credit: ANI

அமராவதி: ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டிணம் அருகில் உள்ள கண்டி போச்சம்மா கோவிலில் இருந்து பாப்பிகொன்டலு என்று இடத்திற்கு கோதாவரி ஆற்றில் 61 பேர் சுற்றுலா படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.  அவர்கள் பயணம் செய்த படகு கச்சளூரு என்ற பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி திடீரென நீரில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் சிலரை மீட்டனர். 

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் 17 உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தை தொடர்ந்து கோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்யுமாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். 

NEXT STORY
கோதாவரி படகு விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு Description: கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், காணாமல் போன 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola