தேர்தல் 2019:டெல்லியில் கவுதம் கம்பீர், விஜேந்தர் சிங் போட்டி!

செய்திகள்
Updated Apr 23, 2019 | 12:36 IST | Times Now

டெல்லியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா சார்பில் கவுதம் கம்பீரும், காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்ணை வீரர் விஜேந்தர் சிங்கும் போட்டியிடுகின்றனர்.

டெல்லியில் கவுதம் கம்பீர், விஜேந்தர் சிங் போட்டி
டெல்லியில் கவுதம் கம்பீர், விஜேந்தர் சிங் போட்டி  |  Photo Credit: PTI

புதுடெல்லி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழந்த கவுதம் கம்பீரை கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளராகவும், மீனாட்சி லேகியை புதுடெல்லி தொகுதி வேட்பாளராகவும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. அதேசமயம், பிரபல குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங்கை தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளர் மகிஷ் கிரிக்கு பதிலாக, கவுதம் கம்பீர் இந்தமுறை களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அரவீந்தர் சிங் லவ்லி கம்பீரை எதிர்த்து போட்டியிடுகிறார். எனினும், கிழக்கு டெல்லியில் கவுதம் கம்பீருக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் அட்டிஷிக்கும் இடையே தான் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

புதுடெல்லி தொகுதியில் மீனாட்சி லேகியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் பிரிஜேஷ் கோயலும், காங்கிரஸ் வேட்பாளராக அஜய் மக்கானும் போட்டியிடுகின்றனர். முன்னதாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது.

சாந்தினி சவுக் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஹர்ஸ்வர்தன் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் குப்தா ஆகியோரை எதிர்த்து ஜே.பி. அகர்வாலை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. வடக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பாரதிய ஜனதா தலைவர் மனோஜ் திவாரியை எதிர்த்துப் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஷீலா திட்ஷித்தை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. 

தெற்கு டெல்லியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சதாவை எதிர்த்து குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கை காங்கிரஸ் இறக்கியுள்ளது. மேற்கு டெல்லி தொகுதியில் பாரதிய ஜனதாவின் பர்வேஸ் சாஹிப் சிங் வர்மா, காங்கிரஸின் மஹபால் மிஸ்ரா மற்றும் ஆம் ஆத்மியின் பல்பீர் சிங் ஜாக்கர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

வடமேற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேஷ் லில்லோத்யாவை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குஹன் சிங் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையையான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், டெல்லியில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையை இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.  டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு மே மாதம் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

NEXT STORY
தேர்தல் 2019:டெல்லியில் கவுதம் கம்பீர், விஜேந்தர் சிங் போட்டி! Description: டெல்லியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா சார்பில் கவுதம் கம்பீரும், காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்ணை வீரர் விஜேந்தர் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
Loading...
Loading...
Loading...