அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது: அறிக்கை தாக்கல்!

செய்திகள்
Updated Aug 14, 2019 | 17:06 IST | Times Now

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப

Minister K. T. Rajenthra Bhalaji
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  |  Photo Credit: Twitter

மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பிலும் தமிழக பொதுத்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராஜேந்திர பாலாஜி 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்து உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இல்லை என்ற காரணத்தினால்  விசாரணை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இதனை அடுத்து நீதிபதிகள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று வழக்கின் விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மற்றும் தமிழக பொதுத்துறை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அறிக்கையில் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.         
 
    

NEXT STORY
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது: அறிக்கை தாக்கல்! Description: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப
loadingLoading...
loadingLoading...
loadingLoading...