முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

செய்திகள்
Updated Aug 24, 2019 | 17:08 IST

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Arun Jaitley passes away
Arun Jaitley passes away  |  Photo Credit: Times Now

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 66.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை.

கடந்த 9-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய சுகதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உட்பட பல்வேறு தலைவர்களும் நேரில் சந்தித்து வந்தனர். 

Senior BJP leader Arun Jaitley passes away at AIIMS.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்தவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வந்தனர்.

அருண் ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இன்று மதியம் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...