டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் காலமானார்

செய்திகள்
Updated Jul 20, 2019 | 17:14 IST | Times Now

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் காலமானார்.

Former Delhi CM Shiela Dixit
Former Delhi CM Shiela Dixit  |  Photo Credit: PTI

டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்‌ஷித் இன்று காலமானார். அவருக்கு வயது 81. 

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் இன்று காலை 10.30 மணியளவில் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 3.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81.

  •  1938-ஆம் ஆண்டு மார்ச் 31-ல் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் பிறந்தவர் ஷீலா தீக்‌ஷித்.
  • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
  • உத்தரப்பிரேதச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷீலா தீக்‌ஷித்.
  • 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்.
  • கடந்த 2014 -ஆம் ஆண்டு சிறிது காலம் கேரள ஆளுநராக பணியாற்றியவர்.
  • கடந்த ஜனவரி 10 ஆம் தேதி டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...