முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

செய்திகள்
Updated Nov 11, 2019 | 13:33 IST | Times Now

டி.என். சேஷன் சேவையைப் பாராட்டி 1996ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கி கௌரவித்தது.

Former chief election commissioner TN Seshan passes away
Former chief election commissioner TN Seshan passes away  |  Photo Credit: Twitter

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி.என்.சேஷன் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் அதன்பின் போக்குவரத்து இயக்குநர், தொழில்துறை செயலர் உட்பட பல்வேறு உயரிய அரசு பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். அவர் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக 1990 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 

இவரது சேவையைப் பாராட்டி 1996ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கி கௌரவித்தது. இவர் ஓய்வுக்குப் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

அவரது இரங்கலுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவுசெய்துள்ளார்.

டி.என்.சேஷன் மறைவுக்கு முதல் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் ’’திரு சேஷன் அவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகனும் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலக்கட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர’’ என்று குறிப்பிட்டுள்ளார். மதியம் 3 மணிக்கு அவரது உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

NEXT STORY