ஆந்திர முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை

செய்திகள்
Updated Sep 16, 2019 | 16:14 IST | Times Now

ஆந்திர பிரதேச மாநில சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் கோடல சிவ பிரசாத் ராவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

former Andhra Pradesh speaker Kodela Siva Prasada Rao
Kodela Siva Prasada Rao, கோடல சிவ பிரசாத் 

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநில சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் கோடல சிவ பிரசாத் ராவ் தனது வீட்டில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்தவர் கோடல சிவ பிரசாத் ராவ். தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னரும் இவரே சபாநாயகராக தொடர்ந்தார். இதுவரை 6 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். மாநில உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். 

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் சிவ பிரசாத் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை. சிவ பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். சிவ பிரசாத்தின் மறைவுக்கு ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன், முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

NEXT STORY