காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு: 5 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

செய்திகள்
Updated Jun 13, 2019 | 08:11 IST | Times Now

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

Five CRPF jawans martyred in Jammu & Kashmir
Five CRPF jawans martyred in Jammu & Kashmir   |  Photo Credit: PTI

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த தாக்குதலில் குண்டு பாய்ந்து 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், 8 தீவிரவாதிகள் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் துணை ராணுவப்படையினரும், போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு சோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட அல் உமர் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

NEXT STORY
காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு: 5 சிஆர்பிஎப் வீரர்கள் பலி Description: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles