78 பெண் எம்.பிக்கள், வரலாற்றில் இதுவே முதல் முறை!

செய்திகள்
Updated May 25, 2019 | 11:02 IST | Economic Times

பா.ஜ.க சார்பில் 53 பெண்களும் காங்கிரஸ் சார்பில் 54 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.கவில் 41 பெண் வெட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

first time in the history 78 women have been elected in loksabha election 2019
first time in the history 78 women have been elected in loksabha election 2019  |  Photo Credit: Twitter

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் 78 பெண் வாக்காளர்கள் வெற்றிபெற்று எம்பிக்களாக பாராளுமன்றத்துக்குச் செல்லவிருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி, ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியனும் அடக்கம்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. பா.ஜ.க சார்பில் 53 பெண்களும் காங்கிரஸ் சார்பில் 54 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.கவில் 41 பெண் வெட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

  1. அதிகபட்சமாக உத்திரப் பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் தலா 11 பெண்கள் வெற்றிபெற்றுள்ளனர். 
  2. ஏற்கனவே 42 பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்த நிலையில் அவர்களில் 27 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
  3. 78 பெண் எம்பிக்கள் தேர்வாகியுள்ளது இதுவே வரலாற்றில் முதல் முறை. 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் 64 பெண்கள் தேர்ந்தடுக்கப்பட்டதே இதுவரை அதிகபட்சமாகும்.
  4. 1952-ஆம் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 24 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  5. மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்தமுறை 78 பெண் எம்பிக்கள் நுழைவதன் மூலம் 14.36% பெண்கள் இடம்பெறுகின்றனர்.
  6. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் மம்தா கூட்டணி 40% பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியது. மொத்தம் 28 இடங்களைப் பிடித்த அந்தக் கூட்டணியில் 9 பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.
  7. வட இந்தியாவை ஒப்பிடும்போது தெற்கில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது மிகவும் குறைவுதான். குறிப்பாகக் கேரளாவில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் தான் வெற்றிபெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெம்யா ஹரிதாஸ்.
  8. தமிழ் நாட்டில் 64 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு அதில் திமுக கூட்டணி சார்பில் கனிமொழி, ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரும் வெற்றிபெற்றுள்ளனர். 
  9. கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் சோபாவும், சுயேட்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
  10. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த கவிதாவும் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரும் வெற்றிபெற்றுள்ளனர். 

 

NEXT STORY
78 பெண் எம்.பிக்கள், வரலாற்றில் இதுவே முதல் முறை! Description: பா.ஜ.க சார்பில் 53 பெண்களும் காங்கிரஸ் சார்பில் 54 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.கவில் 41 பெண் வெட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Loading...
Loading...
Loading...