நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: மத்திய பட்ஜெட், முத்தலாக் மசோதாவுக்கு முக்கியத்துவம்!

செய்திகள்
Updated Jun 17, 2019 | 08:49 IST | Times Now

17வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்  |  Photo Credit: ANI

புதுடெல்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட உள்ளது. மேலும், முத்தலாக் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

ஜூன் 17 ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் டெல்லியில் வரும் 20 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார். இதில், அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தொடரின் முதல் இரண்டு மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதைத்தொடர்ந்து, ஜூலை 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் முத்தலாக், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

NEXT STORY
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: மத்திய பட்ஜெட், முத்தலாக் மசோதாவுக்கு முக்கியத்துவம்! Description: 17வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட உள்ளது.
Loading...
Loading...
Loading...