சார்ஜா துறைமுகத்தில் கப்பலில் தீ - 13 இந்தியர்கள் உயிருடன் மீட்பு

செய்திகள்
Updated May 08, 2019 | 21:12 IST | டைம்ஸ் நவ் தமிழ்

இதுபற்றி செய்து வெளியிட்டுள்ள கல்ஃப் நியூஸ், கப்பலில் சுமார் 22 ஆயிரம் லிட்டர் டீசல், 120 வாகனங்களும் 300 டயர்களும் இருந்தன என்று தெரிவித்திருக்கிறது.

sharjah ship burning
Image Credit: Jebin Pphilip/Gulf News Reader  |  Photo Credit: Twitter

சார்ஜாவில் உள்ள காலித் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி அனைவரும் மீட்கப்பட்டனர் இதில் இருந்த 13 பேரும் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது மீட்கப்பட்ட இந்தியர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

தீப்பற்றிய இருந்ததற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால் கப்பலில் பீப்பாய்களில் டீசல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தீ வேகமாக பரவி கப்பல் முழுக்க எரித்தது. தகவல் அறிந்ததும் ஐந்தே நிமிடத்தில் விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு கப்பலில் இருந்த தீயை முற்றிலுமாக அனைத்து உயிர்சேதம் ஏதும் இன்றி 13 பேரையும் மீட்டு உள்ளனர்.

இதுபற்றி செய்து வெளியிட்டுள்ள கல்ஃப் நியூஸ், கப்பலில் சுமார் 22 ஆயிரம் லிட்டர் டீசல், 120 வாகனங்களும் 300 டயர்களும் இருந்தன என்று தெரிவித்திருக்கிறது. சார்ஜா நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு தீ ஏற்பட்டிருக்கிறது இதனை தீயணைப்பு துறையினர் 6.44 அணைக்கத் தொடங்கி 7.25 க்கு அனைத்தையும் அணைத்து முடித்திருக்கிறார்கள்.


 

NEXT STORY
சார்ஜா துறைமுகத்தில் கப்பலில் தீ - 13 இந்தியர்கள் உயிருடன் மீட்பு Description: இதுபற்றி செய்து வெளியிட்டுள்ள கல்ஃப் நியூஸ், கப்பலில் சுமார் 22 ஆயிரம் லிட்டர் டீசல், 120 வாகனங்களும் 300 டயர்களும் இருந்தன என்று தெரிவித்திருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles