வங்கியில் லோன் கிடைக்காத விரக்தி.. கிட்னியை விற்க முயன்ற விவசாயி!

செய்திகள்
Updated Aug 23, 2019 | 16:57 IST | Times Now

வங்கியில் லோன் கிடைக்காததால் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன் கிட்னியை விற்க முயன்றுள்ளார்.

வங்கியில் லோன் கிடைக்காததால் கிட்னியை விற்க முயன்ற விவசாயி, Farmer in UP Tries to sell his kidney after bank rejects his loan plea
வங்கியில் லோன் கிடைக்காததால் கிட்னியை விற்க முயன்ற விவசாயி  |  Photo Credit: IANS

வங்கியில் லோன் கிடைக்காத விரக்தியால் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன் கிட்னியை விற்க முயற்சி செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன் பூரைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). விவசாயம் செய்து வரும். கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களையும் செய்து வருகிறார். பிரதான் மந்திரி கௌஷால் விகாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றுள்ள இவர், வேறு தொழில் தொடங்குவதற்காக வங்கியில் லோன் கேட்டுள்ளார். ஆனால் இவருக்கு லோன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்திற்காக ராம்குமார் தன் கிட்னியை விற்க முயன்றுள்ளார். தன் கிட்னியை விற்பதாக கூறி, அந்தப்பகுதியில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். 

இதுகுறித்து ராம்குமார் கூறுகையில்,  ஒரு மாதத்திற்கு சராசரியாக 3,000 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. இதை வைத்து மனைவி மற்றும் 4 குழந்தைகள் கொண்ட எனது குடும்பத்தை நடத்த முடியவில்லை. எனக்கு வங்கியில் லோன் நிராகரிக்கப்பட்ட போது என்னிடம் சிலர் பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜ்னாவின் சான்றிதழ் படிப்பை பற்றி கூறினார்கள். நான் அதனை பெற்ற பிறகும் எனக்கு வங்கியில் லோன் நிராகரிக்கப்பட்டது. ஆகையால் வேறு வழி இன்றி பணத்திற்காக கிட்னியை விற்க முடிவெடுத்துள்ளேன். இதற்கான போஸ்டர்களையும்  ஒட்டியுள்ளேன். இதனால் எனக்கு தற்போது சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்து கிட்னியை வாங்கிக்கொள்ள அழைப்பு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.  

இந்த சம்பவத்தை கேள்விபட்ட சஹாரன்பூர் வங்கி அதிகாரி ராஜேஷ் சௌதரி கூறுகையில், ராம்குமாருக்கு வங்கியில் லோன் நிராகரிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், தற்போது அவருக்கு லோன் வழங்க நான் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளேன என்று தெரிவித்தார். பணத்திற்காக உடலுறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்நிலையில் ராம்குமார் லோன் கிடைக்காததால் தன் கிட்னியை விற்க முன்வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...