கோதாவரி படகு விபத்து: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இரங்கல்

செய்திகள்
Updated Sep 15, 2019 | 19:07 IST | Times Now

ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி

PM Modi, பிரதமர் மோடி
பிரதமர் மோடி  |  Photo Credit: ANI

டெல்லி: கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிபட்டிணம் கோதாவரி ஆற்றில் இன்று பிற்பகல் சுற்றுலா பயணிகள் உள்பட 61 பேர் படகு ஒன்றில் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த படகு கச்சளூரு என்ற பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த வந்த மீட்புப்படையினர் இதுவரை 23 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் படகு கவிழ்ந்து 11பேர் இறந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவிக்கிறேன். சோக நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் படகு கவிழ்ந்தது குறித்த பதிவில்," ஆந்திராவில் கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க நான் இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

NEXT STORY