பிரேசில் மதுபான விடுதியில் மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

செய்திகள்
Updated May 20, 2019 | 10:50 IST | Times Now

பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

Eleven killed in shooting in bar in Brazil (Representational Image)
Eleven killed in shooting in bar in Brazil (Representational Image)  |  Photo Credit: Getty Images

பிரசில்லா:  பிரேசில் மதுபான விடுதியில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு பிரேசிலில் பெலம் நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 3 கார்களில் வந்த 7 பேர் அதிரடியாக அந்த விடுதிக்குள் நுழைந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் விடுதியில் இருந்த 6 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEXT STORY
பிரேசில் மதுபான விடுதியில் மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி Description: பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.
Loading...
Loading...
Loading...