நிறைவுற்றது 6வது கட்ட தேர்தல்...63.3% வாக்குகள் பதிவு!

செய்திகள்
Updated May 12, 2019 | 21:43 IST | S.Karthikeyan

டெல்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரப்பிரேதசம், ஜார்கண்ட், ஹரியானா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

டெல்லி உள்பட 7 மாநிலங்களில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு
59 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 50.06 % வாக்குப்பதிவு  |  Photo Credit: ANI

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 50.06 % வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுற்றது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

டெல்லியில் 7 தொகுதிகளிலும், உ்த்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும் ஹரியானாவில் 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கம், பீகார் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் 10.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஷிலா தீட்சித், மனோஜ் திவாரி, திக்விஜய் சிங், மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், ஜோதிராதித்யா, கவுதம் காம்பீர் உள்பட 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 9 மணி நிலவரப்படி பீகார் 59.29%, ஹரியானா 67.97%, மத்திய பிரதேசம் 64.44%, உத்திர பிரதேசம் 54.72%, மேற்கு வங்கம் 80.35%, ஜார்க்கண்ட் 64.50%, டெல்லி 59.74% ஆகிய வாக்குகள் பதிவாகியுள்ளன.

7.00 pm:  7 மணி நிலவரப்படி பீகாரில் 59.29%, ஹரியானா 63.37%, மத்திய பிரதேசம் 60.61%, உத்திர பிரதேசம் 53.95%, மேற்கு வங்கம் 80.16%, ஜார்க்கண்ட் 64.50%, டெல்லி 56.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. (தேர்தல் ஆணைய செயலியின்படி)

6.00 pm:  6 மணி நிலவரப்படி பீகாரில் 55.04%, ஹரியானா 62.43%, மத்திய பிரதேசம் 60.46%, உத்திர பிரதேசம் 50.98%, மேற்கு வங்கம் 80.16%, ஜார்க்கண்ட் 64.46%, டெல்லி 55.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. (தேர்தல் ஆணைய செயலியின்படி)

5.25 pm:  5 மணி நிலவரப்படி பீகாரில் 55.04%, ஹரியானா 61.52%, மத்திய பிரதேசம் 59.73%, உத்திர பிரதேசம் 50.47%, மேற்கு வங்கம் 78.43%, ஜார்க்கண்ட் 62.16%, டெல்லி 52.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. (தேர்தல் ஆணைய செயலியின்படி)

3:25 pm: 3 மணி நிலவரப்படி பீகாரில் 44.40 % , ஹரியானா 51.44 %, மத்திய பிரதேசம் 52.26 %, உத்தரப்பிரதேசம் 43.18 %, மேற்கு வங்கம் 69.78 %, ஜார்கண்ட் 58.08 %, டெல்லி 41.85 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

3:20 pm: 6-ஆம் கட்டத் தேர்தலில் 59 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 46.52 % வாக்குப்பதிவு

3:10 pm: டெல்லியில் காமராஜ் லேன் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

 

 

2:45 pm: 2 மணி நிலவரப்படி பீகாரில் 35.22 % , ஹரியானா 39.16 %, மத்திய பிரதேசம் 42.27 %, உத்தரப்பிரதேசம் 34.30 %, மேற்கு வங்கம் 55.57 %, ஜார்கண்ட்47.16 %, டெல்லி 33.65 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

2:35 pm: 6-ஆம் கட்டத் தேர்தலில் 59 தொகுதிகளில் 2 மணி நிலவரப்படி 39.74 % வாக்குப்பதிவு

1:30 pm: 1 மணி நிலவரப்படி 35.22 % , ஹரியானா 39.0 %, மத்திய பிரதேசம் 42.25%, உத்தரப்பிரதேசம் 34.30 %, மேற்கு வங்கம் 55.61 %, ஜார்கண்ட்47.16 %, டெல்லி 33.08 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

1:00 pm: கிழக்கு டெல்லி தொகுதிக்குட்பட்ட மயூர் விகார் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் கைகளை உயர்த்தி காட்டிய வாக்காளர்கள் 

 

 


12:45 pm: டெல்லி சஞ்சார் பவனில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தனது வாக்கை செலுத்தினார்.

 

 

12:35 pm: 12 மணி நிலவரப்படி 20.70% , ஹரியானா 23.26%, மத்திய பிரதேசம் 28.25%, உத்தரப்பிரதேசம் 21.75 %, மேற்கு வங்கம் 38.26 %, ஜார்கண்ட் 31.27 %, டெல்லி 19.55 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

12:32 pm: 6-ஆம் கட்டத் தேர்தலில் 59 தொகுதிகளில் 12 மணி நிலவரப்படி 25.13 % வாக்குப்பதிவு

11:50 am: டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கணவர் ராபர்ட் வதேராவுடன் வாக்களித்தார் பிரியங்கா காந்தி.

 

11:45 am: பீகார், மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலத்தில் உள்ள 59 தொகுதிகளில் 11 மணி வரை 21.98% வாக்குப்பதிவு

11:20 am: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, டெல்லி நிர்மான் பவானில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

11:00 :am டெல்லி சந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் 111 வயதான பச்சன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.

 

 

10:50 am: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதுடெல்லி என்பி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

 

10:30 am: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைனில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

 

 

10:11 am: ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஜங்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

10.04 am: டெல்லி, அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

 

 

9:30 am: காலை 9 மணி நிலவரப்படி பீகாரில் 9.03, ஹரியானாவில் 3.74, மத்திய பிரதசேத்தில் 4.01, உத்தரப்பிரதேசத்தில் 6.86, மேற்கு வங்கத்தில் 6.58, ஜார்கண்டில் 12.45, டெல்லியில் 3.74 வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:15 am: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது வாக்கினை கர்னல் தொகுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

 

 

9:12 am: டெல்லி துணை முதல்வர் சிசோடியா டெல்லி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

9:05 am: டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமைக்கப்பட்டு வாக்குச் சாவடியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாக்கினை செலுத்தினார்.
 

 

 

8:50 am: டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீட்சித் டெல்லி வடகிழக்கு தொகுதியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

8:26 am: உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் பிரயாக்ராஜ் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

 

7:50 am: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீர் பழைய ராஜீந்தர் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

 

 

7:40 am: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஹரியானாவின் குருகிராமில் உள்ள பள்ளியொன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

 

 

7:32 am: மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

7:20 am: டெல்லி, சாந்தினி சவுக் வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஆர்வமுடன் வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

 

 

7:00 am:டெல்லி, மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

 

 

 

NEXT STORY
நிறைவுற்றது 6வது கட்ட தேர்தல்...63.3% வாக்குகள் பதிவு! Description: டெல்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரப்பிரேதசம், ஜார்கண்ட், ஹரியானா ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles