பிலிப்பைன்ஸ்: மணிலாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; 5 பேர் பலி எனத்தகவல்!

செய்திகள்
Updated Apr 22, 2019 | 20:00 IST | Times Now

மத்திய பிலிப்பைன்ஸில் இன்று 5.7 ரிக்டர் என்கிற அளவில் இந்த வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

philippines, பிலிப்பைன்ஸ்
மணிலா நிலநடுக்கம்   |  Photo Credit: Twitter

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், சிலர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிலிப்பைன்ஸில் லூஸான் தீவின் மையப்பகுதியில் இன்று 5.7 ரிக்டர் என்கிற அளவில் இந்த வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையமும் உறுதி செய்துள்ளது.

 

 

பிலிப்பைன்ஸ் நேரப்படி மாலை 5.11 மணியளவில் பூமியின் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயர்ந்த கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அலறி அடித்து வெளியேறியுள்ளனர். 

 

 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிலநடுக்க காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 
 

NEXT STORY
பிலிப்பைன்ஸ்: மணிலாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; 5 பேர் பலி எனத்தகவல்! Description: மத்திய பிலிப்பைன்ஸில் இன்று 5.7 ரிக்டர் என்கிற அளவில் இந்த வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...