விமானம் வேண்டாம்: ஜம்மு- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதிலடி

செய்திகள்
Updated Aug 13, 2019 | 18:10 IST | Times Now

முன்னதாக, “நான் ராகுல் காந்தியை இங்கு வர வேண்டி அழைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு விமானம் ஏற்பாடு செய்கிறேன். இங்கு வந்து (நிலவரத்தை) பார்வையிட்டு பிறகு பேசுங்கள்,” என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேசியிருந்தார்.

Satyapal Malik, Rahul Gandhi
சத்யபால் மாலிக், ராகுல் காந்தி  |  Photo Credit: ANI

புது டெல்லி: காஷ்மீரைச் சுற்றி பயணிக்கவும் முக்கிய தலைவர்கள், மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க சுதந்திரமும் வேண்டும் என ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் சாகக்கிடக்கின்றனர் என்றும் அரசாங்கம் கூறிவது போல அங்கு இயல்பு நிலை கிடையாது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் ராகுல் காந்தியை இங்கு வர வேண்டி அழைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு விமானம் ஏற்பாடு செய்கிறேன். இங்கு வந்து (நிலவரத்தை) பார்வையிட்டு பிறகு பேசுங்கள். பொறுப்புள்ள மனிதராக இருந்து கொண்டு இப்படி பேசாதீர்கள்,” என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

“அயல்நாட்டு ஊடகங்கள் (தவறாக சித்தரிக்க) முயற்சித்துள்ளனர். அவர்களை எச்சரித்துள்ளோம். உங்களுக்காக அனைத்து மருத்துவமனைகளையும் திறந்து வைக்கிறோம். யாரேனும் ஒருவர் உடலில் ஒரு குண்டு தாக்கி இருக்கிறதா என நிரூபித்துக் காட்டுங்கள். நான்கு பேருக்கு பெல்லட் குண்டுகளால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதே தவிற யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை,” என்றார் அவர்.

முன்னதாக, காஷ்மீர் நிலவரம் குறித்து ட்வீட் செய்திருந்த ராகுல் காந்தி, “காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் ரகசியமான இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது; குறுகிய பார்வையுடையது மற்றும் முட்டாள்தனமானது, ஏனெனில், இந்திய அரசால் (ஜம்மு காஷ்மீரில்) தலைமைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தீவிரவாதிகள் நிறப்பிவிடுவர். (எனவே) கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

 

 

NEXT STORY
விமானம் வேண்டாம்: ஜம்மு- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதிலடி Description: முன்னதாக, “நான் ராகுல் காந்தியை இங்கு வர வேண்டி அழைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு விமானம் ஏற்பாடு செய்கிறேன். இங்கு வந்து (நிலவரத்தை) பார்வையிட்டு பிறகு பேசுங்கள்,” என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேசியிருந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...