'அரசியல் ரீதியிலான சந்திப்பில்லை’ - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு குறித்து துரைமுருகன்!

செய்திகள்
Updated May 14, 2019 | 19:09 IST | Times Now

அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 

tamil nadu, தமிழ்நாடு
துரைமுருகன்   |  Photo Credit: Twitter

அமராவதி: ஆந்திர மாநிலம், அமராவதியில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.

நாட்டில் வருகின்ற மே 23ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் அரசியல் தலைவர்களின் திடீர் சந்திப்புகள், முடிவுகள் என அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை.

நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். 3வது அணிக்கான அழைப்பிற்கான சந்திப்பு இது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

duraimurugan

இந்நிலையில்தான் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 

இதுகுறித்து பேசிய துரைமுருகன், ‘இது அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது. ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி தலைமை செயலகத்தில் இருப்பது தெரிந்து அவரைச் சந்திக்கச் சென்றோம்’ என்று தெரிவித்துள்ளார். 

அமராவதி தலைமை செயலகத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், துரைமுருகன் மனைவி ஆகியோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
'அரசியல் ரீதியிலான சந்திப்பில்லை’ - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பு குறித்து துரைமுருகன்! Description: அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles