பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தீவிரவாத தாக்குதல் - ராகுல் காந்தி ட்வீட்

செய்திகள்
Updated Nov 08, 2019 | 14:51 IST | Times Now

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் கடந்து விட்டன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

Rahul Gandhi
ராகுல் காந்தி  |  Photo Credit: IANS

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 

கருப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமா் மோடி திடீரென்று அறிவித்தாா். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.  இருப்பினும் வங்கி வாசலில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரிதும் வேதனைக்கு உள்ளாகினா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் கடந்து விட்டன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. #DeMonetisationDisaster #BlackDay என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "பண மதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் சீரழிந்தது. பலா் உயிரை எடுத்தது. லட்சக்கணக்கான சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான இந்தியர்களை வேலை இழக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை" என்று பதிவிட்டுள்ளாா்.

NEXT STORY