ரஃபேல் போர் விமானத்திற்கு எலுமிச்சை பழம்,தேங்காய், பூ வைத்து பூஜை!

செய்திகள்
Updated Oct 08, 2019 | 20:16 IST | Times Now

ரஃபேல் போர் விமானத்திற்கு எலுமிச்சை பழம், தேங்காய், பூ வைத்து பூஜை செய்த பின் டசால்ட் நிறுவனத்தின் தலைமை விமானியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அதில் பறந்தார்.

ரஃபேல் போர் விமானதிற்கு பூ, பழம் வைத்து பூஜை,Defence Minister Rajnath Singh performs 'Shastra Puja' on the Rafale combat jet
ரஃபேல் போர் விமானதிற்கு பூ, பழம் வைத்து பூஜை  |  Photo Credit: ANI

பிரான்ஸ்: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்திற்கு எலுமிச்சை பழம், தேங்காய், பூ வைத்து சிறப்பு பூஜை செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் ரஃபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார். மெரிக்நாக்கில் உள்ள டசால்ட் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜயதசமியை முன்னிட்டு ரஃபேல் விமானத்தின் மேல் தேங்காய், பூ, லட்டு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விமானத்தின் சக்கரத்திற்கு அடியில் எலுமிச்சை பழங்களும் வைக்கப்பட்டது. விமானத்தில் குங்குமத்தால் சமஸ்கிரிதத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஓம் என்று எழுதினார்.  

 

 

இதன் பிறகு அவர்  டசால்ட் நிறுவனத்தின் தலைமை விமானியுடன் ரஃபேல் விமானத்தில் பறந்தார். இதன் மூலம் தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தை தொடர்ந்து தற்போது ரஃபேல் போர் விமானத்திலும் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளாா். ரஃபேல் போர் விமானத்தில் இவரது பயணம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்தது.  

 

 

இந்த பயணத்திற்கு முன்னதாக பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமான படைக்கு இந்த ரஃபேல் போர் விமானங்கள் கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார். மேலும் கூறிய நேரத்தில் டசால்ட் நிறுவனம் இந்த ரஃபேல் விமானத்தை ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிபிட்டார்.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...