பீகார்: மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82ஆக உயர்வு

செய்திகள்
Updated Jun 16, 2019 | 17:12 IST | Times Now

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது. 

Death toll of children due to acute encephalitis in Bihar’s Muzaffarpur rises to 82
Death toll of children due to acute encephalitis in Bihar’s Muzaffarpur rises to 82  |  Photo Credit: IANS

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் சென்ற வாரம் 38 பேருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அன்றைய தினமே 14 குழந்தைகள் உயிரிழந்தன. தற்போது இந்த மூளைக் காய்ச்சல் அறிகுறியுடன் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதி அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மூளைக் காய்ச்சலாம் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைவதால் இதனை சமாளிக்க முடியாத குழந்தைகள் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைகளின் உயிரிழப்பு 14இல் இருந்து 40ஆக இரண்டு நாட்களிலேயே உயரத்தொடங்கியது. இன்னிலையிம் தற்போது வரை சுமார் 82 குழந்தைகள் இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் காரணமாக வரும் 22-ஆம் தேதி வரை முசாபர்பூரில் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மூட்டப்பட்டுள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. அங்கு 40 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் முசாபர்பூர் மட்டுமல்லாமல் பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் உயிரழ்ந்த குழந்தைகள் 100க்கும் மேல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  

NEXT STORY
பீகார்: மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82ஆக உயர்வு Description: பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது. 
Loading...
Loading...
Loading...