இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவுத் இப்ராஹிம் கூட்டாளி!

செய்திகள்
Updated Jul 17, 2019 | 11:32 IST | Times Now

தாவுத் இப்ராஹிம் குழுவின் முக்கிய நபரான அகமத் ரஸா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளான். இந்திய அரசுக்கும், மும்பை போலீசாருக்கும் இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவுத் இப்ராஹிம் கூட்டாளி
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவுத் இப்ராஹிம் கூட்டாளி  |  Photo Credit: IANS

புதுடெல்லி: தாவுத் இப்ராஹிம் குழுவின் முக்கிய நபரான அகமத் ரஸா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்திய அரசுக்கும், மும்பை போலீசாருக்கும் இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. சோட்டா ஷகிலின் நெருங்கிய கூட்டாளியான அகமத் ரஸா ஹவாலா புரோக்கராக செயல்பட்டு வந்ததோடு, மும்பை, சூரத் மற்றும் தானே நகரங்களில் தாவுத் குழுவின் தொழில்களை கவனித்து வந்ததுள்ளான்.

சூரத்தில் உள்ள தொழில் அதிபர்களை குறிவைத்து அகமத் ரஸா தனது தொழிலை நடத்தி வந்துள்ளான். கடந்த ஒராண்டாகவே அகமத் ரஸாவை கண்காணித்து வந்த மும்பை போலீசார், தேடப்படுபவர்கள் பட்டியலிலும் பெயரை சேர்த்திருந்தனர். 

இந்நிலையில், கடந்த மாதம் துபாயில் அகமத் ரஸாவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து,  புலனாய்வு அமைப்பினர், அகமத் ரஸாவை  இந்தியா கொண்டுவரும் முயற்சிகளைத் தொடங்கினர். 

மேலும், மும்பை குற்றப்பிரிவு போலீசார் தனிப்படைகளை அமைத்து அகமத் ரஸாவின் கூட்டாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்வதில் வெற்றிபெற்ற இந்தியா, தற்போது தாவுத் இப்ராஹிம் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

தாவுத் இப்ராஹிம் கும்பல் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உதவியுடன் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துக்கு உதவுவது உள்ளிட்ட வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...