ரஃபேல் போர் விமானத்தின் A to Z தகவல்கள் இதோ!

செய்திகள்
Updated Oct 09, 2019 | 13:14 IST | Times Now

பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளை தொடர்ந்து 4-வது நாடாக இந்தியா இந்த ரஃபேல் போர் விமானங்களை பயன்படத்தவுள்ளது.

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்,Dassault Rafale combat aircraft special features
ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்  |  Photo Credit: Twitter

டசால்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ஆம் ஆண்டி இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டதை தொடர்ந்து நேற்று முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் இதோ.

  1. ரஃபேல் போர் விமானமானது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ரஃபேல் என்ற வார்த்தைக்கு பலமான காற்று என்று பொருள்.
  2. இந்த விமானமானது அதிகபட்சமாக மணிக்கு 2,222.6 கிலோமீட்டர் (1.8 மாக்) வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.
  3. இரு என்ஜின்களும் டெல்டா விங் டிசைனும் கொண்ட இந்த ரஃபேல் விமானம் 4+ தலைமுறை போர் விமானம் ஆகும். 
  4. 15.27 மீட்டர் நீளமும், 10.8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த விமானத்தில் எடை எரிபொருள் நிரப்பாமல் கிட்டத்தட்ட 10,000 கிலோ ஆகும். மேலும் இதில் 9,500 கிலோ எடை வரை லோடுகளை ஏற்றலாம்.
  5. இந்த விமானத்தில் ரேடார் எச்சரிக்கை கருவியும் உண்டு. லே மலைப்பிரதேசம் போன்ற மிகவும் குளிர்ந்த இடங்களிலும் குறைந்த எரிபொருள் செலவில் டேக்-ஆப் செய்யும் திறன் கொண்டது இந்த ரஃபேல் விமானம்.
  6. இந்த ரஃபேல் போர்  விமானத்தில் ஏவுகணைகள், அதிநவீன ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்தலாம். 
  7. இந்தியாவுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டதோடு இந்த விமானத்தில் லோ பாண்ட் ஜேமர்கள், இன்ப்ராரெட் சர்ச் மற்றும் ட்ராக்கிங் சிஸ்டம், இஸ்ரேலி ஹெல்மெட் மௌண்டட் டிஸ்ப்ளே ஆகிய வசதிகளும் உண்டு.
  8. இந்த விமானமானது சிங்கள் சீட்டர், டபுள் சீட்டர் என 2 வடிவிலும் உள்ளது. இந்தியா 28 சிங்கிள் சீட்டர், 8 டபுள் சீட்டர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.   
  9. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளை தொடர்ந்து 4-வது நாடாக இந்தியா இந்த ரஃபேல் போர் விமானங்களை பயன்படத்தவுள்ளது. அந்த வகையில் தற்போது முதல்  ரஃபேல் போர் விமானம் அம்பாலா விமான தளத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.      

            

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...