#Cyclone Vayu வாயு புயல் எதிரொலி.. குஜராத்தில் 77 விரைவு ரயில்கள் ரத்து

செய்திகள்
Updated Jun 13, 2019 | 11:49 IST | Times Now

வாயு புயல் காரணமாக போர்பந்தர், காந்திதாம், புஜ், பாவ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 77 முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Cyclone Vayu
Cyclone Vayu won't hit Gujarat  |  Photo Credit: PTI

குஜராத்: வாயு புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை எனவும், கடற்கரை பகுதியையொட்டி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை புயல் கரையை கடக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி வாயு புயல் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியது. இதனால் குஜராத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மைய கூடுதல் இயக்குநர் தேவந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதே நேரம் குஜராத் கடற்கரை பகுதியையொட்டி புயல் கரையை கடக்கும் போது கிர் சோம்நாத், ஜூனாகத், போர்பந்தர் மற்றும் துவாரகா பகுதிகளில் 135 முதல் 145  கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாயு புயலின் காரணமாக போர்பந்தர், காந்திதாம், புஜ், பாவ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 77 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் தாழ்வான பகுதிகளில் வசித்த 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 52 தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், வருவாய்த் துறையினர், எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியவற்றின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

NEXT STORY
#Cyclone Vayu வாயு புயல் எதிரொலி.. குஜராத்தில் 77 விரைவு ரயில்கள் ரத்து Description: வாயு புயல் காரணமாக போர்பந்தர், காந்திதாம், புஜ், பாவ்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 77 முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...