தப்பிக்கும் சிபிஎம், தேசிய அந்தஸ்தைப் பறிகொடுக்கும் சிபிஐ?

செய்திகள்
Updated May 25, 2019 | 08:53 IST | Times Now

தேசிய அந்தஸ்த்தைத் தக்கவைக்க தேர்தல் ஆணையம் இங்கு குறிப்பிட்டிருக்கும் மூன்று விதிகளில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

cpi party misses national party status but cpm may holds
cpi party misses national party status but cpm may holds  |  Photo Credit: PTI

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனியாக 303 இடங்களை வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் இந்த முறையும் 52 எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. மூன்றாவதாக இந்த முறை அதிக தொகுதிகள் வென்ற கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. மொத்தம் 23 இடங்களைத்தனியாகவும் பாண்டிச்சேரியை சேர்த்து 38 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளாவில் ஆதிக்கம் செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளன. 2004-ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளும் 59 இடங்களை வென்றது, 2014-இல் அவை 12ஆகக் குறைந்தது. இந்த முறை அது 5 தாக சுருங்கியுள்ளதால், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த 5 இடங்களைல் 4 இடங்கள் தமிழ்நாட்டில் வென்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இடம் கேரளாவாகும்.

இவ்விரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், சிபிஎம் கட்சி வேட்பாளர்கள் பி.ஆர். நடராஜன் கோவையிலும், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர். அதே போல சிபிஐ வேட்பாளர்கள் செல்வராஜ் நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வெற்றி பெற்றனர். சிபிஎம் வேட்பாளர் ஆரிஃப் கேரளா ஆலப்புழாவில் வெற்றிபெற்றார். தேசிய அந்தஸ்த்தைத் தக்கவைக்க தேர்தல் ஆணையம் இங்கு குறிப்பிட்டிருக்கும் மூன்று விதிகளில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

அதாவது மக்களவைத் தேர்தலில் 11 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். மொத்தம் பதிவான வாக்குகளில் 6% ஓட்டுகளை நான்கு மாநிலங்களில் இருந்தாவது பெற்றிருக்க வேண்டும். மேலும் நான்கு மாநிலங்களில் குறைந்தது தலா 4 இடங்களையாவது பெற்றிருக்க வேண்டும். கடைசி விதிமுறையாக குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக்கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதில் இந்தக் கடைசி விதிமுறையின் படி சிபிஎம் கட்சி தேசிய அந்தஸ்தைத் தக்கவைக்கிறது. ஆனால் சிபிஐ இந்த எந்த விதிமுறைகளிலும் இந்தமுறை தேர்வு பெற முடியாததால் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலைபாடு வரும் 2021 தேர்தலில்தான் செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

NEXT STORY
தப்பிக்கும் சிபிஎம், தேசிய அந்தஸ்தைப் பறிகொடுக்கும் சிபிஐ? Description: தேசிய அந்தஸ்த்தைத் தக்கவைக்க தேர்தல் ஆணையம் இங்கு குறிப்பிட்டிருக்கும் மூன்று விதிகளில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 
Loading...
Loading...
Loading...