கத்தியை காட்டி மிரட்டிய ஓட்டுநர்.. கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள் - வைரல் வீடியோ

செய்திகள்
Updated Jun 17, 2019 | 12:45 IST | Mirror Now

ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Cops lathicharge tempo driver in delhi
Cops lathicharge tempo driver in delhi  |  Photo Credit: Twitter

டெல்லி: சீக்கிய ஓட்டுநர் ஒருவர் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார், அவரை கீழே தள்ளி, சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

தலைநகர் டெல்லியின் பரபரப்பான இடங்களில் ஒன்றான முகர்ஜி நகர் சாலையில் காவல்துறை வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று மோதியதாக தெரிகிறது. இதையடுத்து காவலர்கள் அந்த ஆட்டோ ஓட்டுநரை விசாரிக்க முயற்சி செய்தனர். அப்போது சீக்கியரான ஆட்டோ ஓட்டுநர் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் சீக்கிய ஓட்டுநரை நடுரோட்டில் கீழே தள்ளி, அடித்து வெளுக்கின்றனர். தடுக்க வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனையும் காவலர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக லத்தியால் தாக்குகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

போலீசாரின் இந்த செயலை கண்டித்து சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி சஸ்பெண்ட் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர் விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார். பட்டப்பகலில் நடுரோட்டில் காவலர்கள் ஆட்டோ ஓட்டுநர் இடையே நடந்த இந்த சண்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

NEXT STORY
கத்தியை காட்டி மிரட்டிய ஓட்டுநர்.. கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள் - வைரல் வீடியோ Description: ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola