ராகுலே தலைவராக நீடிப்பார் - காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்

செய்திகள்
Updated May 25, 2019 | 17:41 IST | Times Now

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மனதாக நிராகரித்துவிட்டனர்.

Rahul Gandhi continue to congress president
Rahul Gandhi continue to congress president  |  Photo Credit: Times Now

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர்வார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்வி குறித்து ஆராய அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு 12 கோடியே 13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மனதாக நிராகரித்துவிட்டனர். ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. அவரே தலைவராக தொடர்வார். 

கட்சியை மறுசீரமைப்பு செய்ய ராகுல் காந்திக்கு காரிய கமிட்டி முழு அதிகாரம் வழங்கியுள்ளது.  கட்சியின் எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும். நாட்டு மக்கள் நலனுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் கட்சி தன்னை அர்பணித்துள்ளது.

NEXT STORY
ராகுலே தலைவராக நீடிப்பார் - காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம் Description: மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மனதாக நிராகரித்துவிட்டனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles