ராஜினாமா செய்த ராகுல், ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள்!

செய்திகள்
Updated May 25, 2019 | 13:04 IST | Times Now

ராகுல்காந்தியும் தோல்விக்கும் பொருபேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அவரிடமே பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு காரிய கமிட்டியில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Rahul Gandhi offers to quit, congress working committee meeting today
Congress working committee meeting  |  Photo Credit: ANI

17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மக்களவையில் எதிர்கட்சியாக இருக்க 55 இடங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது முறையாக எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸின் பாரம்பரியத் தொகுதியான அமேதியில் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். இரண்டாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் தோல்வி குறித்து அலச இன்று காலை 11 மணி அளவில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டியிருந்தது.

இதில் முத்தக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களான மன்மோகன் சிங், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, அமரிந்தர் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் ஆலொசனை நடத்தினர்.

ஏற்கனவே தோல்விக்குப் பொருப்பேற்று ஒடிசா, கர்நாடகா, உத்திரப்பிரதேசத் தலைவர்கள் ராஜினாம செய்திருக்கும் நிலையில் ராகுல்காந்தியும் தோல்விக்கும் பொருபேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அவரிடமே பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு காரிய கமிட்டியில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதேபோல தற்போது நடைபெற்ற கூட்டத்தில் தனது ராஜினாமாவை ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் இதனை கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

  


 

NEXT STORY