காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா - கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி!?

செய்திகள்
Updated Jul 06, 2019 | 14:53 IST | Times Now

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Kumarasamy
Kumarasamy 

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மேலும் 14 பேர் ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்னேரமும் அரசு  கவிழும் அபாயம் இருப்பதால் கர்நாடகாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வெளியாகியிருக்கும் தகவலின்படி சனிக்கிழமை சட்டப்பேரவைக்கு சென்ற 14 எம்எல்ஏக்கள் அங்கு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க காத்திருப்பதாக தெரிகிறது. இந்த பதினோரு பேரில் 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளமும் 11 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஆவர்.

 இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் பிஜேபி 105 எம்எல்ஏக்களுடன் உள்ளது. காங்கிரஸில் 78 எம்எல்ஏக்களும் ஜனதா தளத்தில் 37 எம்எல்ஏக்களும் என மொத்தம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது இந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து 14  எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் குமாரசாமி வரும் திங்கட்கிழமை அன்று தான் இந்தியாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

 

NEXT STORY
காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா - கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி!? Description: இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola