கர்நாடகா கிளைமேக்ஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ

செய்திகள்
Updated Jul 23, 2019 | 23:03 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

Karnataka Assembly, கர்நாடக சட்டப்பேரவை
கர்நாடக சட்டப்பேரவை  |  Photo Credit: ANI

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் -மஜத ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உள்பட 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து முதல்வர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்களாக நடைபெற்று வந்தன. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

 

இதற்கிடையில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்திற்குள் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு வழியாக மாலை 7.15 மணிக்கு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதன் மூலம் கர்நாடக அரசியில் ஏற்பட்டிருந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமாரசாமி ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று தெரிகிறது. 

 

 

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். அதில், ஒருவர் நியமன உறுப்பினர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் உள்பட 20 உறுப்பினர்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...