காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா

செய்திகள்
Updated Jul 07, 2019 | 19:56 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia  |  Photo Credit: PTI

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பல பல காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாம செய்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்த ஜோதிராதித்ய சிந்தியா மக்களின் தீர்ப்பை ஏற்று காங்கிரஸ் அடைந்த தோல்விக்குப் பொறுபேற்று எனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த பெரிய பொறுப்பை என்னிடம் வழங்கியதற்காக ராகுல் காந்திக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா. இவர், நடைபெற்ற மக்களவைத் தேர்தல் டாப் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 6வது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு சுமார் 374 கோடி.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஜூன் மாதம் 25ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்னும் செயற்குழு உறுபினர்கள் இந்த கடிதத்தை ஏற்காத நிலையில் அடுத்தடுத்து பல காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். மும்பையின் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவும் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா Description: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola