இது வாஜ்பாயின் கனவு: காஷ்மீர் மக்கள் தற்போதுதான் சுதந்திரம் அடைந்துள்ளனர் - மோடி உரையின் முழு விவரம்

செய்திகள்
Updated Aug 08, 2019 | 23:06 IST | Times Now

இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காஷ்மீர் பிரச்னை குறித்து மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு விளக்கம் அளித்தார் 

PM Modi speech
PM Modi speech  |  Photo Credit: ANI

காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும்,  காஷ்மீர் மற்றும் லடாக்கை இரு மாநிலங்களாகப் பிரித்தும் மசோதாக்களை இயற்றி மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மத்திய அரசு அவற்ற நிறைவேற்றியது. அதன் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதன் சுருக்கம் கீழே...

’’காஷ்மீர் விவகாரத்தில் நம் அரசு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் ஆகியோரது கனவு நனவாகியுள்ளது. இந்த 370 பிரிவு இத்தனை நாட்களாக காஷ்மீர் மக்களுக்கு ஒரு தடையாக இருந்தது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. கிட்டத்தட்ட 42ஆயிரம் மக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டனர். அது பற்றி இங்கு யாராவது பேசினார்களா? 

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களால் ஒரு சாரார் மட்டுமே பயன் அடைந்து வந்தனர். இனி பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். மேலும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். அங்கு குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்படும். இங்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் இந்தியா திணிக்காது. 

 

 

யூனியன் பிரதேசம் என்பது வெறும் தற்காலிகம் தான். விரைவில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும். காஷ்மீர் மற்றும் லடாக் சிறந்த சுற்றுலா, பொழுதுபோக்கு இடமாக மாற்றப்படும். இனி தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை அங்கே நடத்தும் அளவுக்கு மாற்றப்படும். கூடிய சீக்கிரத்தில் ஹாலிவுட் படபிடிப்பு நடத்தும் அளவுக்கு மாறும்.

ஐஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் தொடங்கப்படும். மக்கள் கூறும் மாற்றுக் கருத்துகளை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் தேச விரோத செயல்களை நாங்கள் ஆதரிக்க முடியாது. காஷ்மீர் மக்கள் இனி அமைதியான சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். பதற்றமான சூழ்நிலையில் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்கிய காஷ்மீர் மக்களுக்கு நன்றி’’ என்று கூறினார் பிரதமர் மோடி 

 

 

 

 

 

NEXT STORY
இது வாஜ்பாயின் கனவு: காஷ்மீர் மக்கள் தற்போதுதான் சுதந்திரம் அடைந்துள்ளனர் - மோடி உரையின் முழு விவரம் Description: இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காஷ்மீர் பிரச்னை குறித்து மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு விளக்கம் அளித்தார் 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...