நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு!

செய்திகள்
Updated May 21, 2019 | 14:44 IST | Times Now

நியூசிலாந்தில் மசூதிக்குள் புகுந்து 51 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது தீவிரவாதி என குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு
நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு  |  Photo Credit: ANI

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதிக்குள் புகுந்து 51 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 6 ஏ வின் கீழ் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளியான பிரன்டன் டாரன்ட் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து போலீசார்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அருகருகே உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது கைதுசெய்யப்பட்டுள்ள டாரன்ட் மீது 51 பேரை கொலை செய்தது மற்றும் 40 பேரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

NEXT STORY
நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு! Description: நியூசிலாந்தில் மசூதிக்குள் புகுந்து 51 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது தீவிரவாதி என குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles