தேன்நிலவின் போது சோகம்; பாராக்ளைடிங் விபத்தில் சென்னை இளைஞர் பலி

செய்திகள்
Updated Nov 19, 2019 | 12:25 IST | Times Now

அரவிந்த் சென்ற பாராசூட் காற்றின் அழுத்தம் காரணமாக கயிறு அறுந்து இந்த விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

அரவிந்த்
அரவிந்த்  |  Photo Credit: Twitter

சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி, தேன் நிலவுக்கு சென்ற இடத்தில் பாராக்ளைடிங் விபத்தில் சிக்க ஆண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்கல் அரவிந்தும் ப்ரீத்தியும். இந்த மாதம் 10ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இருவரும், குலுமணாலிக்கு தேன் நிலவுக்காக சென்றுள்ளனர். அங்கே பாராக்ளைடி சாகசத்தை மேற்கொள்ள குலு அருகே உள்ள பிரபல பாராக்லைடிங் பகுதியான தோபிக்கு சென்று பாராக்ளைடிங் புரிந்துள்ளனர். 

தம்பதி இருவரும் தனித்தனியே பாராசூட்டில் சென்றுள்ளனர். அப்போது முதலில் ப்ரீத்தி வந்தடைந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அரவிந்த் சென்ற பாராசூட் வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த ப்ரீத்தி, அங்கிருந்தவர்களிடம் கூற சக பாராசூட் பைலட்கள் பள்ளாத்தாக்கில் அரவிந்தைத் தேடச் சென்றுள்ளனர். அப்போதுதான் பள்ளாத்தாக்கில் அரவிந்தும் அவருடன் சென்ற பைலட்டும் கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. 

உடனே மீட்கும் படையினர் மீட்டதில் அரவிந்த் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. அவருடன் சென்ற பைலட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அரவிந்த் சென்ற பாராசூட் காற்றின் அழுத்தம் காரணமாக கயிறு அறுந்து இந்த விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது. திருமணம் ஆன சில தினங்களில் இந்த துயர சம்பவம் நடைபெற்றது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
 

NEXT STORY