உலகமே உற்று நோக்கும் நிகழ்வு இது! - நிலவில் தரையிறங்கும் சந்திராயன்-2 !

செய்திகள்
Updated Sep 07, 2019 | 00:06 IST | Times Now

உலகமே இந்த நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

chandrayaan 2
chandrayaan 2  |  Photo Credit: Twitter

சந்திராயன்-2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், லேண்டர் விக்ரமின்  டி-ஆர்பிட் நகர்வும் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து இன்று நள்ளிரவு லேண்டர் விக்ரம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம்  தரையிறங்குகிறது.

உலகமே இந்த நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கிறது.  ஏனென்றால் லேண்டர் விகரம், மற்ற நாடுகள் போல் அல்லாது நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கவுள்ளது. பின்னர் அதில் இருந்து ரோவர் பிரக்யான் வந்து, நிலவின் மேற்பரப்பில் 14 நாட்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்தும். இன்று இரவு 1.30 மணிக்கு வெற்றிகரமாக இந்த நிகழ்வு நடைபெறும் பட்சத்தில்,  அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யும் 4-வது நாடாக இந்தியா இருக்கும். தென் துருவத்தில் தரை இறங்கும் முதல் நாடாகவும் இந்தியா இருக்கும்!

 நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.  ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட சந்திராயன்-2 விண்கலம் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணிற்கு சீறிபாய்ந்தது. கடந்த 14-ஆம் தேதி புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதனிடையே சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது.  அதன்படி சரியாக இரவு 1.30 மணிக்கு சாஃப்ட் லேண்டிங் ஆகிறது சந்திரயான்! 

NEXT STORY
உலகமே உற்று நோக்கும் நிகழ்வு இது! - நிலவில் தரையிறங்கும் சந்திராயன்-2 ! Description: உலகமே இந்த நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles