சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது - இஸ்ரோ சிவன் அறிவிப்பு

செய்திகள்
Updated Sep 08, 2019 | 16:09 IST | சு.கார்த்திகேயன்

நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படம் மூலம் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.

ISRO Chief, K Sivan
ISRO Chief, K Sivan  |  Photo Credit: ANI

பெங்களூர்: சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வாக கருதப்பட்ட 'விக்ரம் லேண்டர்' நேற்று முன்தினம் அதிகாலை நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. சரியாக 2.1 கி.மீ தூரத்தில் இருந்தபோது லேண்டர் தரைக்கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பில் இருந்து விலகியது.

 

 

இந்நிலையில், சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரமின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஏஏன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பிட்டர் அனுப்பிய புகைப்படம் மூலம் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இன்னும் லேண்டரில் இருந்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும்" என்று சிவன் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது - இஸ்ரோ சிவன் அறிவிப்பு Description: நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படம் மூலம் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles