நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது சந்திராயன்-2: இஸ்ரோ அறிவிப்பு!

செய்திகள்
Updated Aug 20, 2019 | 12:26 IST

சந்திராயன்-2 விண்கலம் இன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளார்.

நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது சந்திராயன்-2, Chandrayaan 2 enters Lunar Orbit
நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது சந்திராயன்-2  |  Photo Credit: YouTube

சந்திராயன்-2 விண்கலம் இன்று காலை 9.30 மணி அளவில் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.  

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்ய ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து படிப்படியாக 5 முறை சந்திராயன்-2 உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக பூமியின் புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.   

இந்நிலையில் இன்று சந்திராயன்-2 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. 114 கீ.மீ x 18072 கீ.மீ அளவை கொண்ட இந்த அர்பிட்டை  அடைய இன்று காலை 9.02 மணி அளவில் தொடங்கப்பட்ட செயல்முறைகள் கிட்டத்தட்ட 1738 வினாடிகள் நீடித்தது. பிறகு 9.30 மணி அளவில் நிலவின் முதல்கட்ட சுற்றுப்பாதையை அடைந்தது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் இதனைப் பற்றி கூறுகையில் இது மிகவும் சவாலான செயல்முறை என்று குறிப்பிட்டார். ஏனெனினில் திட்டமிட்ட வேகத்தை விட விண்கலன் அதிக வேகத்தில் நிலவை நோக்கி சென்றால் கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் தொலைந்து போகக்கூடும் என்றும் குறைவான வேகத்தில் சென்றால் நிலவின் புவிஈர்ப்பு விசையால் ஈரக்கப்ட்டு நிலவின் பரப்பில் மோதக்கூடும் என்றும் தெரிவித்தார். ஆனால் அது போல எதுவும் நிகழாமல் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின்  சுற்றுப்பாதையை சந்திராயன்-2 அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  

 

 

 

 

இதனை தொடர்ந்து படிப்படியாக அடுத்தகட்ட ஆர்பிட்டுகளை  சந்திராயன்-2 அடையவுள்ளது. இறுதியாக ஆர்பிட்டரை விட்டு லேண்டர் விக்ரம் பிரிந்து வந்து செப்டம்பர் 7-ஆம் தேதி சாஃப்ட் லேண்டிங் மூலம் நிலவின் தென் துருவத்தில்  தரையிறங்கவுள்ளது. அதன் பின் ரோவர் பிரக்யான் நிலவின் பரபரவில் பல ஆராய்ச்சிகளை நடத்தும்.       

    

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...