நிலவுக்கு புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தின் சிறப்புகள் என்ன?

செய்திகள்
Updated Jul 22, 2019 | 21:17 IST | Times Now

இஸ்ரோ நிறுவனத்திற்கும் இந்தியாவுக்கும் மிகவும் முக்கிய அத்தியாயமான 'சந்திராயன் 2' பற்றிய தொகுப்பு.

Chandrayaan-2
சந்திராயன்-2  |  Photo Credit: Twitter

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் அடுத்த அத்தியாயமான 'சந்திராயன் 2' இன்று மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் மைல்கல் சந்திராயன் 2 விண்கலத்தின் செயல்பாடு மற்றும் முக்கிய அம்சங்களை பற்றிய சிறிய தொகுப்பு இதோ!  

கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யவதற்காக விண்ணில் ஏவப்பட்டது 'சந்திராயன்-1'. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2008-ஆம் ஆண்டு நிலவில் தண்ணீர் திட நிலையில் இருப்பதை கண்டுபிடித்தது சந்திராயன்-1. இந்த கண்டுபிடிப்பு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிகளில் ஒரு முக்கிய பதிவாகும். மேலும் 'சந்திராயன் 1' மூலம் நிலவை பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம்  'சந்திராயன் 2' விண்கலம் நிலவுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.  'சந்திராயன் 2' விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு உலக நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவப் பகுதியை பற்றி  'சந்திராயன்-2' ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆகவே இது இந்தியாவுக்கு மட்டும் இன்றி பிற நாடுகளுக்கும் நிலவை பற்றிய ஆராய்ச்சிகளுக்கான முக்கியமான அத்தியாயமாகும். 

Scientific Experiments

ராக்கெட் ஏவப்பட்ட 50-வது நாளில் லேண்டர் மூலம் ரோவர் ஒன்று தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த லேண்டர்க்கு 'விக்ரம்' என்றும் ரோவருக்கு 'பிரக்யான்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நிலவில்  ஃசாப்ட் லேண்டிங் செய்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு சேரும். இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திராயன் 2-வின் லேண்டர் இந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரை இறங்குகிறது. இதிலிருந்து ரோவர் தனியாக வந்து 14 நாட்கள் நிலவில் ஆராய்ச்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.       

 Lander Vikram Lander Vikram Lander Vikram

இஸ்ரோ நிறுவனத்தின் முந்தைய முக்கிய சாதனையான சந்திராயன்-1 மற்றும் மங்கள்யான் ஆகியவை பி.எஸ்.எல்.வி லான்சர் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. ஆனால் சந்திராயன்-2, ஜி.எஸ்.எல்.வி மார்க்-3  மூலம் செலுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவின் சக்திவாய்ந்த லான்சரான ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 கிட்டத்தட்ட 43.43  மீட்டர் உயரமானது. மேலும் இது 2 S200 சாலிட் ராக்கெட்  பூஸ்டர்களை கொண்டது. 

GSLV Mark 3

இது போல பல சிறப்பு அம்சங்களை கொண்ட 'சந்திராயன்-2' தன் ஆராய்ச்சி நோக்கங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கும் பட்சத்தில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...