ஜெகனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த சந்திரபாபு நாயுடு, மகனுக்கு வீட்டுக்காவல்!

செய்திகள்
Updated Sep 11, 2019 | 11:17 IST | Times Now

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வன்முறை அரசியல் செய்வதாகக் கூறி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. உண்ணாவிரதப் போராட்டம் செய்ய திட்டமிட்டிருந்த சந்திரபாபு நாயுடுவிற்கு வீட்டுக்காவல்.

TDP leaders and workers tries to go to Chandrababu Naidu's residence, சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்லும் கட்சியினரை காவல்துறைனர் தடுத்து நிறுத்தினர்
சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்லும் கட்சியினரை காவல்துறைனர் தடுத்து நிறுத்தினர்  |  Photo Credit: ANI

ஆந்திர பிரதேசம்: ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வன்முறை அரசியல் செய்வதாகக் கூறி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நான்கு ஊர்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் செய்ய திட்டமிட்டிருந்தார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், தற்போது அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

 

 

நடந்து முடிந்த ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. புதிய ஆட்சி அமைந்ததிலிருந்தே ஜெகன்-சந்திரபாபு ஆகியோர் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி முறையாக அனுமதி வாங்கவில்லை என ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...