மூன்றாவது அணி அமைப்பது குறித்து இன்று முக ஸ்டாலினைச் சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்

செய்திகள்
Updated May 15, 2019 | 09:26 IST | Times Now

திமுக காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

chandra sekhar rao meet mk stalin today in chennai
chandra sekhar rao meet mk stalin today in chennai  |  Photo Credit: Twitter

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணி அமைப்பது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசவிருக்கிறார். 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி ஏழு கட்டங்களாக நாடுமுழுவதும் நடந்துவருகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில், 19-ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவும் அதனைத் தொடர்ந்து 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. 

இந்நிலையில் தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைப்பது குறித்து அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க  சென்ற வாரம்  டெல்லியில் ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்துப் பேசினார். இதேபோல தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று காங்கிரஸ்- பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைத்து ஆட்சி செய்ய, சென்ற வாரம் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார்.

 தமிழ்நாட்டில் சுற்றுலா வந்துள்ள சந்திரசேகர ராவ் கன்னியாகுமரியில் தங்கி அங்கே சுற்றுலா தளங்களைப் பார்வையிட்டார். தற்போது சென்னையில் இருக்கும் அவர், இன்று மாலை மூன்றாவது அணி அமைப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். திமுக ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
 

NEXT STORY
மூன்றாவது அணி அமைப்பது குறித்து இன்று முக ஸ்டாலினைச் சந்திக்கிறார் சந்திரசேகர ராவ் Description: திமுக காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles