'ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன்' காஃபி டே நிறுவனர் உருக்கமான கடிதம் !

செய்திகள்
Updated Jul 30, 2019 | 12:15 IST | Times Now

எனது நோக்கம் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதல்ல. ஒரு தொழில் முனைவராக நான் தோற்றுவிட்டேன். என்றாவாது ஒருநாள் நீங்கள் என்னை புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

Siddhartha letter to board and employees
Siddhartha letter to board and employees  |  Photo Credit: ANI

பெங்களூர்: தொழிலதிபராக தான் தோல்வி அடைந்து விட்டதாக மாயமான காஃபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. 

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. பிரபல காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளரான இவர், தனது குடும்பத்தினரிடம் சக்லேஷ்பராவுக்கு செல்வதாக கூறியுள்ளாா். ஆனால், மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் அருகே சென்றவுடன் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு நடந்து சென்றவர் திரும்பவில்லை. இதனால், பதட்டமடைந்த கார் டிரைவர் குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாயமான சித்தார்த்தாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் மாயமாவதற்கு முன்பு சித்தார்த்தா, காஃபி டே ஊழியர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது, அதில், "37 ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் நேரடியாக 30000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த நிறுவன் காஃபே காஃபி டே. ஆனால், இன்று என்னுடைய தொழிலை லாபகரமாக கொண்டு செல்ல தவறிவிட்டேன். அதற்கான அனைத்து முயற்சிகளை எடுத்த பின்னரும் தோல்வி அடைந்துள்ளேன். என்னை நம்பியவர்களை கைவிட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். தனியார் பங்குதாரர்கள் தரும் அழுத்தத்தை என்னால் பொறுக்க இயலவில்லை.

 

 

நீங்கள் ஒவ்வொருவரும் தைரியமாக இருந்து இந்தத் தொழிலை முன்னெடுக்க வேண்டும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நிறுவனம் சார்ந்த பண பரிமாற்றத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன். எனது பணப் பரிவர்த்தனைகள் குறித்து எனது டீமிற்கோ, மூத்த நிர்வாகிகளுக்கோ, ஆடிட்டருக்கோ எதுவும் தெரியாது.  இத்தகவலை எனது குடும்பத்தினரிடம் கூட மறைத்துவிட்டேன். எனது நோக்கம் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதல்ல. ஒரு தொழில் முனைவராக நான் தோற்றுவிட்டேன். என்றாவாது ஒருநாள் நீங்கள் என்னை புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என நான் நம்புகிறேன். எனது சொத்துகளின் பட்டியலையும் அதன் உத்தேச மதிப்பையும் இணைத்துள்ளேன். அதன் மதிப்பீடுகள் நான் செலுத்த வேண்டிய கடனைவிட அதிகமாகவே இருக்கிறது. அதனால், எல்லோருக்கும் கடனை திருப்பிச் செலுத்த முடியும் என நம்புகிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

NEXT STORY
'ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன்' காஃபி டே நிறுவனர் உருக்கமான கடிதம் ! Description: எனது நோக்கம் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதல்ல. ஒரு தொழில் முனைவராக நான் தோற்றுவிட்டேன். என்றாவாது ஒருநாள் நீங்கள் என்னை புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...