ஊழல் வழக்குகள்.. நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

செய்திகள்
Updated Jul 09, 2019 | 14:28 IST | Times Now

ஊழல் வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 19 மாநிலங்களில் உள்ள 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Central Bureau of Investigation
Central Bureau of Investigation  |  Photo Credit: PTI

டெல்லி: கடந்த வாரம் 50 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், இன்று நாடு முழுவதும் 110 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது சிபிஐ.

ஊழல், கிரிமினல் நடவடிக்கை மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக சிபிஐ தனித்தனியாக 30 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

டெல்லி, பரத்பூர், மும்பை, டெல்லி, சண்டிகர், ஜம்மு, புனே, ஜெய்ப்பூர், கோவா, கான்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் நடத்தப்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய சோதனை இதுவாகும். 

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை 12 மாநிலங்களில் மும்பை, லூதியானா, தானே, கயா, குர்கான் உள்ளிட்ட 18 நகரங்களில் 50 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இதில் ரூ. 1134 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. தற்போது இரண்டாவது மிகப்பெரிய சோதனையை சிபிஐ அதிகாரிகள் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

NEXT STORY
ஊழல் வழக்குகள்.. நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை Description: ஊழல் வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 19 மாநிலங்களில் உள்ள 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola